இலங்கை
கல்விச் சீர்திருத்தங்களை அரசு அரசியலாகப் பார்க்கக்கூடாது; அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவிப்பு!

கல்விச் சீர்திருத்தங்களை அரசு அரசியலாகப் பார்க்கக்கூடாது; அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவிப்பு!
கல்வித்துறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பியே மக்கள் வாக்களித்தனர். இந்த விடயத்தை அரசியலாகப் பார்க்காமல் அரசாங்கம் அதன்பொறுப்பை நிறைவேற்றவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 1 முதல் 6ஆம் வகுப்புகளில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரம் கல்விச்சீர்திருத்தம் அல்ல. ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் உட்பட அனைத்தும் அதில் அடங்கும். அதேபோன்று பாடசாலை கல்வியை மாத்திரம் மறுசீரமைப்பதாலும் மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் – என்றார்.