வணிகம்
கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது இனி ஈசி… இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க மக்களே

கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது இனி ஈசி… இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க மக்களே
கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது என்பது சிறிது காலம் எடுக்கும் செயல் என்றாலும், சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் சில மாதங்களிலேயே உங்கள் கிரெடிட் ஸ்கோரை 100 புள்ளிகள் உயர்த்த முடியும். வீட்டுக் கடன் பெறுவது, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவது என எதுவாக இருந்தாலும், சரியான கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு பல வாய்ப்புகளை கொடுக்கும். இதை படிப்படியாக எப்படி உயர்த்தலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்துங்கள்:கிரெடிட் ஸ்கோரில் சுமார் 35%, உங்கள் பணம் செலுத்தும் வரலாற்றை (Payment History) பொறுத்து அமையும். ஒரு கட்டண தவணையை தவறவிடுவது கூட உங்கள் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே, கிரெடிட் கார்டு பில்கள் உட்பட ஒவ்வொரு தவணையையும் சரியான நேரத்தில் செலுத்த உறுதி செய்யுங்கள். உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை குறைக்கவும்:உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிக முக்கியமான அம்சம், நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட்டின் சதவீதம் (Percentage of Available Credit) ஆகும். இது உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் (Credit Utilisation Ratio) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் இந்த சதவீதத்தை 30% க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.கிரெடிட் வரம்பை அதிகரிக்க முயற்சி செய்யலாம்:நிலுவைகளை விரைவாக செலுத்த முடியாவிட்டால், பயன்பாட்டை குறைப்பதற்கான மற்றொரு முறை உங்கள் கிரெடிட் வரம்புகளை (Credit Limits) அதிகரிப்பதாகும். உங்கள் கிரெடிட் கார்டு வழங்குநரை அழைத்து உங்கள் வரம்பை அதிகரிக்க கோரலாம். பழைய கணக்குகளை மூடுவதை தவிர்க்கவும்:பழைய அல்லது பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளை மூடுவது உங்கள் சராசரி கணக்கு காலத்தையும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய கிரெடிட்டையும் குறைக்கலாம். இவை இரண்டும் உங்கள் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே, அவசியம் இல்லாதபட்சத்தில் பழைய கணக்குகளை மூட வேண்டாம்.கிரெடிட் ஸ்கோர் மேம்பாடுகளுக்கு நேரம் எடுக்கும் என்றாலும், நிலைத்தன்மை முக்கியமானது. சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், குறைந்த கிரெடிட் பயன்பாடு மற்றும் புத்திசாலித்தனமான கிரெடிட் மேலாண்மை போன்றவை படிப்படியாக உங்கள் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.