பொழுதுபோக்கு
குழந்தை பெற்றுக்கொள்வது, தத்தெடுப்பது தனிப்பட்ட விருப்பம்; எனக்கு பல அடையாளம் இருக்கு: நடிகை அபிராமி!

குழந்தை பெற்றுக்கொள்வது, தத்தெடுப்பது தனிப்பட்ட விருப்பம்; எனக்கு பல அடையாளம் இருக்கு: நடிகை அபிராமி!
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். தாய்மை அடைவதா வேண்டாமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிராமி கடந்த 1995-ம் ஆண்டு மலைாயளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன்பிறகு 1999-ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அபிராமி, அடுது்து அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமணையாக அமைந்தது. விருமாண்டி படத்திற்கு பின் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அபிராமி அங்கு வேலையும் செய்து வந்துள்ளார்.தொடர்ந்து 2014-ம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்ட அபிராமி அதே ஆண்டு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்து ஜோதிகாவின் ரீ-என்டரி படமான 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழிலும் ரீ-என்டரி ஆன அபிராமி விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு டப்பிங் பேசியிருந்தார். அதன்பிறகு, சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில்அவரின் மனைவியாக நடித்திருந்தார்.திருமணம் செய்துகொண்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ளாத அபிராமி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாய்மை என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்ணுக்கும் எப்போ தாய்மை அடைய வேண்டும்? தாய்மை வேண்டுமா? வேண்டாடா? எத்தனை குழந்தைகள், அந்த குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டுமா? அத்தெடுக்கலாமா? என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.அதே சமயம் அம்மா என்பது எனது அடையாளத்தின் பெரிய அம்சம். ஆனால் அது எனது முழுமையான அடையாளமா என்றால் இல்லை. சுதந்திரமான பெண், மனைவி, மகள், தாய், ப்ரண்டு என பல ரோல்கள் எனக்கு இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்று வேண்டாம் என்று சொன்னாலும் எனக்கு கஷ்டமாக இருக்கும். அதேபோல் தாய்மை என்பது இதில் ஒரு பகுதி. இது இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் ஒரு கற்பனை இருக்கும். ஆனால் அதை அனுபவிக்கும்போது தான் அதன் ஆழம் தெரியும். அடுத்து என்ன என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று அபிராமி கூறியுள்ளார்.