Connect with us

தொழில்நுட்பம்

கொசுவைக் கொல்லும் நவீன மிஷின்… ஒரு நொடியில் 30 கொசுக்களை அழிக்கும் லேசர் கருவி!

Published

on

mos

Loading

கொசுவைக் கொல்லும் நவீன மிஷின்… ஒரு நொடியில் 30 கொசுக்களை அழிக்கும் லேசர் கருவி!

கொசுக்களின் தொல்லை ஒழிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, சீனாவிலிருந்து புதிய தொழில்நுட்பம் பதிலளித்துள்ளது. ‘ஃபோட்டான் மேட்ரிக்ஸ்’ (Photon Matrix) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவி, லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களைக் குறிவைத்து அழிக்கவல்ல புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும்.ஒரு கொசுவை வெறும் கையால் அடிப்பதற்கே சில நேரங்களில் போராட வேண்டி இருக்கும். ஆனால், இந்த ‘ஃபோட்டான் மேட்ரிக்ஸ்’ கருவி, கொசுக்களை அனாயசமாக அழிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் மிக சுவாரஸ்யமானது. இந்தச் சாதனம், அதிநவீன லிடார் (LiDAR) உணரிகளைப் பயன்படுத்துகிறது. லேசர் கற்றையை உமிழ்ந்து, அதன் பிரதிபலிப்பின் மூலம் தூரம், வேகம் போன்றவற்றை அளவிடும் இந்த லிடார் சென்சார்கள், பறக்கும் கொசுவின் அளவு, தூரம் மற்றும் திசை ஆகியவற்றை வெறும் 3 மில்லி விநாடிகளுக்குள் துல்லியமாகக் கண்டறிகின்றன. அடுத்த நொடியே, சிறப்பு லேசர் கற்றையைச் செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழிக்கும் அசுர திறன் கொண்டது இந்தக் கருவி. கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதே இதுபோன்ற கருவிகளில் மிகவும் முக்கியம். அந்த வகையில், இந்த ஃபோட்டான் மேட்ரிக்ஸ் கருவியில் ஒரு ரேடார் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்தக் கருவி நீர்ப்புகாதபடி (Waterproof) வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை வீட்டிற்குள்ளும், தோட்டங்களிலும், பொது இடங்களிலும் என எந்த இடத்திலும் எளிதாக நிறுவ முடியும். கொசு வலைகள், புகைப் போடுதல் போன்ற பாரம்பரிய முறைகளை விட இது அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கும் என நம்பப்படுகிறது.ஃபோட்டான் மேட்ரிக்ஸ் கருவி வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு 2 மாடல்களில் கிடைக்கிறது. அடிப்படை மாடல் இது 3 மீட்டர் தூரம் வரையிலும் உள்ள கொசுக்களைத் தாக்கும் திறன் கொண்டது. ப்ரோ மாடல் சற்று அதிக பரப்பளவைப் பாதுகாக்க விரும்புபவர்களுக்காக, இது 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களைத் தாக்கும். இதன் விலை சுமார் ரூ.40,102 முதல் ரூ.53,898 ரூபாய் வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று விலை அதிகமாகத் தோன்றினாலும், கொசுக்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொந்தரவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு பயனுள்ள முதலீடாக இருக்கலாம்.இந்தக் கருவியின் லேசர் சக்தி, பாதுகாப்புச் சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், இது முழுமையாகப் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால், கொசுக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது திருப்புமுனையாக அமையும். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்குகின்றன. ‘ஃபோட்டான் மேட்ரிக்ஸ்’ போன்ற தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தில் கொசு இல்லாத உலகத்தை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன