இலங்கை
கொழும்பில் அதி சொகுசு வீடொன்றை நிர்மாணித்தல் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் அதி சொகுசு வீடொன்றை நிர்மாணித்தல் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் அதிசொகுசு வீடொன்றை நிர்மணித்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவரே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான சந்தேக நபரான பெண் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகம போகுந்தர வீதியில் 8.67 பேர்ச் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2 மாடி வீடு மற்றும் சொத்துக்கள் தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடு சுமார் 15 அடி உயரமுள்ள ஒரு பெரிய சுவரால் சூழப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எந்தவொரு தொழிலும் ஈடுபடாத இந்தப் பெண், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்த சொத்தை பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவுக்கு 2023 ஆம் ஆண்டு இரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நடவடிக்கைகளுடன் இந்தப் பெண் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிருலப்பனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளை மையமாகக் கொண்டு கடத்தல்காரரின் ஆதரவாளர்களால் வழங்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தில் அந்தப் பெண் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையும் பெறப்பட்டது.
இந்த விசாரணைகளை விரைவுபடுத்தி, புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ருவன் காந்த, முதலில் இந்த சொத்துக்கு 7 நாள் தடையைப் பெற்றார்.
பின்னர், ஹோமகம நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் பொலிஸாரால் மூன்று மாத காலத்திற்கு தடையை நீடித்துள்ளனர்.