வணிகம்
சட்டென குறைந்த தங்கம் விலை: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க மக்களே

சட்டென குறைந்த தங்கம் விலை: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க மக்களே
கடந்த சில நாட்களாக தங்கம் சந்தை பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி, தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.75,040க்கு விற்பனையானது. பிறகு மறுநாளிலிருந்தே தங்கம் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஜூலை 29-ம் தேதி, தங்கம் விலை மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.73,200க்கு விற்பனையானது.ஆறு நாட்களுக்குப் பிறகு, நேற்று (ஜூலை 30, 2025) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.73,680க்கு விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.9,150லிருந்து ரூ.9,210 ஆக உயர்ந்தது.இன்று (ஜூலை 31, 2025) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.73,360க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.125க்கு விற்பனை செய்யப்படுகிறது.