Connect with us

இலங்கை

சபா குகதாஸ் அநுர அரசாங்கம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

Published

on

Loading

சபா குகதாஸ் அநுர அரசாங்கம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

   வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் இன்றி வரக்கூடிய சூழலை அநுர அரசாங்கம் உருவாக்கவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

அண்மையில் கொழும்பு ஷங்க்ர்ல ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி, அச்சம் இன்றி நாட்டுக்குள் வந்து முதலீடு செய்யலாம் எந்த தடையும் இல்லை.

எல்லோரும் வாருங்கள் என அறை கூவல் ஒன்றை விடுத்தார்.

இந்த அறிவிப்பு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் கோட்டாபய ராஜபக்ச அரசுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி விஐித ஹேரத் போன்று அறைகூவலை முன் வைத்தனர்.

Advertisement

ஆனால் பெரியளவிற்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. காரணம் இலங்கைத் தீவின் அரசியல் அமையின்மையும் உள் நாட்டில் தீர்க்கப்படாது உள்ள தேசிய இனப்பிரச்சினையும் முதன்மையான விடையங்களாகும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தான் நாட்டின் பொருளாதார முதலீடாக அமையும் என்ற உண்மையை அநுர அரசு உணர்ந்து செயல் வடிவம் கொடுக்கும் போதே நாட்டில் பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்ல, இன நல்லிணக்கத்தையும் பூரண சுதந்திரத்தையும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ய முடியும்.

இதுவே அச்சமின்றி முதலீட்டாளர்கள் வருவதற்கான சூழலை உருவாக்கும் என கூறிய வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் , அத்துடன் மாதாந்தம் மில்லியன் கணக்கான உல்லாசப் பயனிகள் வந்து குவிவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும் என தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன