இலங்கை
சம்பூரில் மனித என்புத்தொகுதி தொடர்ச்சியான அகழ்வு தேவை; நீதிமன்றத்தில் அறிக்கை

சம்பூரில் மனித என்புத்தொகுதி தொடர்ச்சியான அகழ்வு தேவை; நீதிமன்றத்தில் அறிக்கை
திருகோணமலை – சம்பூர் பகுதியில் அண்மையில் மனித என்புச்சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் தேவை என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றபோது மனித என்புத்தொகுதிகள் சில மீட்கப்பட்டிருந்தன. இதையடுத்து, மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் தொடர்பிலும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கை வழங்குமாறு தொடர்புடைய மருத்துவ அதிகாரிகளுக்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பூரில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் நீண்டகாலத்து உட்பட்டவையாகக் காணப்படுகின்றன. அந்தப்பகுதியில் விரிவான அகழ்வுப்பணிகளை மேற்கொண்டாலே தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் விரிவான கலந்துரையாடலை நடத்தி, தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படவுள்ளது.