இலங்கை
செம்மணிப் புதைகுழியில் உருக்கம் குழந்தையை அணைத்தவாறு என்புத்தொகுதியொன்று மீட்பு!

செம்மணிப் புதைகுழியில் உருக்கம் குழந்தையை அணைத்தவாறு என்புத்தொகுதியொன்று மீட்பு!
அரியாலை- செம்மணிப் புதைகுழியில், குழந்தையின் என்புத்தொகுதியை அணைத்தவாறு என்புத்தொகுதியொன்று அவதானிக்கப்பட்ட நிலையில், அவ்விரு என்புத்தொகுதிகளும் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி மீதான அகழ்வுப் பணிகளின் இரண்டாம்கட்ட நடவடிக்கையின் 25ஆம் நாள் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன் போதே, குழந்தையின் என்புத்தொகுதியை வலது கரத்தால் அணைத்தவாறு என்புத்தொகுதியொன்று அவதானிக்கப்பட்டு – மீட்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் 4 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 என்புத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இதுவரை 115 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 102 என்புத்தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.