பொழுதுபோக்கு
ஜெய்சங்கர் மகன் வைத்த கோரிக்கை; சென்னை கல்லூரி சாலைக்கு பெயர் மாற்றம் செய்ய திட்டம்

ஜெய்சங்கர் மகன் வைத்த கோரிக்கை; சென்னை கல்லூரி சாலைக்கு பெயர் மாற்றம் செய்ய திட்டம்
காலத்தால் அழியாத கலைஞர்கள் வரிசையில், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு விதமான கம்பீரம், துணிச்சல், மற்றும் நகைச்சுவை உணர்வு மனதில் தோன்றும். அவரது திரைப்படங்கள், ஒரு காலத்தில் இளைய தலைமுறையினரின் கொண்டாட்டமாக இருந்தன. ஜெய்சங்கர் வல்லவன் ஒருவன், பட்டணத்தில் பூதம் போன்ற பழைய படங்கள் முதல் முரட்டுக் காளை மற்றும் அருணாச்சலம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.ஜெய்சங்கர், தமிழ் திரையுலகில் ஒரு மாறுபட்ட பரிணாமத்தை ஏற்படுத்தியவர். அவர் நடித்த கதாநாயகன் பாத்திரங்கள் வெறும் வீரதீர சாகசங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அவற்றில் ஒரு இளைஞனின் காதல், நகைச்சுவை, மற்றும் ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பு போன்ற பல்வேறு பரிமாணங்கள் இருந்தன. ஜெய்சங்கர் வெறும் நடிகராக மட்டும் இருக்கவில்லை. அவர் நடித்த பல திரைப்படங்களில், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் தனித்துவமாக இருந்தன.ஜெய்சங்கர் மறைந்தாலும், அவரது நினைவுகள் இன்றும் வாழ்கின்றன. அவரது கலைப் பங்களிப்பை போற்றும் வகையில், சென்னை மாநகராட்சி ஒரு மகத்தான பெருமையை அவருக்கு அளித்திருக்கிறது. சென்னை மாநகராட்சி, ஜெய்சங்கர் வாழ்ந்து வந்த கல்லூரி சாலையின் பெயரை, “ஜெய்சங்கர் சாலை” என மாற்ற முடிவு செய்துள்ளது. சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மற்றும் ஆணையர் ஜெ.கு.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில், அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் ‘கல்லூரி சாலை’என்று பெயரிடப்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற சாலைக்கு மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ‘கல்லூரி சாலை’யின் ஒரு பகுதிக்கு நடிகர் ஜெய்சங்கரின் பெயர் வைக்க வேண்டும் என்று அவரது மகன், சங்கர நேத்ராலயா பேராசிரியர் விஜய் சங்கர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.இதை ஏற்று, ஜெய்சங்கரின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மறைந்த நடிகர் ஜெசங்கரின் மகனான விஜய் சங்கர், அவரது தந்தை ஜெய்சங்கர், 1960களில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ‘ஜோன்ஸ் சாலை’ என்ற பகுதியில் வசித்தார் என்றும், அதன் பின்னர் அந்த சாலைக்கு ‘கல்லூரி சாலை’ என்று எம்.ஜி.ஆரால் பெயரிடப்பட்டது என்றும் கூறினார். மேலும், அந்த சாலையில் உள்ள வீட்டில்தான் ஜெய்சங்கர் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஜெய்சங்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த சாலையில் உள்ள ‘கல்லூரி சாலை’யில் ஒரு பகுதிக்கு ஜெய்சங்கரின் பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் பெயர்களை சூட்டுவது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதேபோல், நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த சாலையின் ஒரு பகுதிக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.