இலங்கை
தாதியர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

தாதியர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரல்!
2020, 2021, மற்றும் 2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாயப்பிரிவில் தோற்றியோரிடமிருந்து தாதியர் பயிற்சிநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரி க.பொ.த. சாதாரணதரத்தில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது விவசாயப் பிரிவில் ஒரே தடவையில் 3 பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
18 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்குக் கூடாமலும் இருப்பதுடன் திருமணம் ஆகாதவராக இருக்கவேண்டும். சுகாதார அமைச்சின் இணையத்தளமான “www. health.gov.lk” எனும் இணையவழியூடாக விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவேண்டும். மேலதிக தகவல்களுக்கு 0713526234 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.