இலங்கை
நடை பாதை போக்குவரத்துக்கு இடையூறான வியாபார நடவடிக்கை அகற்றல்!

நடை பாதை போக்குவரத்துக்கு இடையூறான வியாபார நடவடிக்கை அகற்றல்!
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பிரதான வீதியை ஆக்கிரமித்து பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக நடை பெறுகின்ற வியாபாரங்கள், விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றுகின்ற பணிகள் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையின் கீழ் நேற்று (30) மாலை இடம் பெற்றது.
கிண்ணியா வர்த்தக சங்கம்,வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற குறித்த திடீர் நடவடிக்கையானது கிண்ணியா புஹாரியடி சந்தியில் இருந்து டீ சந்தி வரை இடம் பெற்றது.
இதன் போது வீதி யோரங்களில் நடை பாதைக்கு தடையாகவுள்ள வியாபார பொருட்கள் அகற்றப்பட்டதுடன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.எதிர் காலத்தில் நடை பாதையை தடை செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை இடம் பெறும் எனவும் வியாபார உரிமையாளர்களுக்கு மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.