இலங்கை
நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்
நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக்க தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை காலமும் அலுவலகங்கள்மூலம் பொதுமக்களுக்கு தேவையான வரைபடங்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நாளை முதல் இணையத்தளம் மூலமாக வரைபடங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
அதேநேரம், நில தகவல் அமைப்பின் தகவல்களை இணையத்தளத்தின் வழியாக பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக்க தெரிவித்துள்ளார்.