சினிமா
பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜாசாப்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…!வெளியான தகவல் இதோ…!

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜாசாப்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…!வெளியான தகவல் இதோ…!
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பான் இந்தியன் சயன்ஸ் ஃபிக்ஷன் படமானது ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து, இந்திய சினிமாவின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்நிலையில் பிரபாஸ் தனது அடுத்த படம் ‘தி ராஜாசாப்’ மூலம் திரையில் மின்ன தயாராக உள்ளார்.மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்குமுன் டிசம்பர் 5, அன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு காரணங்களால் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.புதிய தகவலின்படி, ‘தி ராஜாசாப்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி, வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியன் திரைப்படமாகும்.பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்க, டிஜி விஷ்வா பிரசாத் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான ஹாரர் மற்றும் நகைச்சுவை கலந்த திரில்லராக இப்படம் உருவாகி வருகின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.