இலங்கை
புதிய அரசியலமைப்பிற்கான முயற்சி தென்படவில்லை – சிறிதரன் சுட்டிக்காட்டு!

புதிய அரசியலமைப்பிற்கான முயற்சி தென்படவில்லை – சிறிதரன் சுட்டிக்காட்டு!
இந்த அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எங்களுக்கான
நீண்ட அரசியல் கொள்கைகளை கொண்ட சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வு என்பது எங்களுக்குரியது.
குறிப்பாக காணி பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வு வேண்டும் தமிழ் மக்கள் தங்களையே தாங்கள் ஆளக்கூடிய சுய ஆட்சி அமைய வேண்டும்.
அந்த வகையிலான ஆட்சி முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அரசாங்கத்தோடு நாட்டுக்குள் இந்த அழகு முறையை கொண்டு வருவதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் ஒரு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது இங்குள்ள இனங்களை ஒன்றிணைக்கின்ற எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.