Connect with us

இலங்கை

பூமி மீது தாக்கம் ஏற்படுத்தும் வேற்றுகிரகவாசிகள் ;விஞ்ஞானிகளில் அதிர்ச்சி தகவல்

Published

on

Loading

பூமி மீது தாக்கம் ஏற்படுத்தும் வேற்றுகிரகவாசிகள் ;விஞ்ஞானிகளில் அதிர்ச்சி தகவல்

ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி பல்லாண்டுகளாக மனித குலத்துக்கு மர்மம் மற்றும் ஆர்வம் உருவாக்கி வருகிற நிலையில், பூமியை நோக்கி பயணிக்கும் ஒரு மர்ம விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் அவி லோயப், இந்த நிகழ்வை மிக தீவிரமாக எச்சரித்துள்ளார்.

Advertisement

அவரின் கூற்றுப்படி, இந்த மர்ம பொருள் “3I/அட்லஸ்” என அழைக்கப்படுகிறது (முன்னர் A11pl3Z).

இது சுமார் 10–20 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

இந்த விண்வெளிப் பொருள் 700 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும்.

Advertisement

இது சூரிய மண்டலத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதனை முதன்முறையாக சிலி நாட்டின் ரியோ ஹர்டாடோ தொலைநோக்கி கண்டறிந்தது.

செப்டம்பர் 2025 வரை பூமியில் இருந்து தொலைநோக்கி வழியே காணக்கூடியது.

Advertisement

நவம்பர் இறுதியில், இது சூரியனை நெருங்கும்.

டிசம்பர் தொடக்கத்தில், இது சூரியனின் மறுபுறமாக இருந்து மீண்டும் தெரியத் தொடங்கும்.

வானியல் நிபுணர் அவி லோய்ப் மற்றும் அவரது குழு, இந்த பொருள் வேற்றுகிரகவாசிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப சாதனம் ஆக இருக்கக்கூடும் என நம்புகின்றனர்.

Advertisement

2017-ல், ‘ஓமுவாமுவா’ என்ற மற்றொரு மர்ம விண்கல் பற்றி அவர் இதேபோல் ஏலியன்களுடன் தொடர்பு இருக்கலாம் என கூறியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்த பொருள் மெகா நகரம் “மென்மேட்டன்” அளவுக்கு பெரியது.

அதனால், அது பூமியைத் தாக்கினால் மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

Advertisement

இருப்பினும், இது குறித்த துல்லிய கணிப்புகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.

நாசா, ஐஎஸ்ஆர்ஓ, ஹார்வர்டு போன்ற அமைப்புகள் தற்போது இந்த மர்ம பொருளின் பயண பாதை, தோற்றம் மற்றும் தாக்கங்களைப் பற்றி விரிவான கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா? என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன