இலங்கை
போலி அழைப்புகளால் நிதிமோசடி அதிகரிப்பு!

போலி அழைப்புகளால் நிதிமோசடி அதிகரிப்பு!
போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பணமோசடி செய்யும் முயற்சிகள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்ததாவது:-
போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி இடம்பெறும் பணமோசடிகள் நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், ‘ஓ.ரி.பி.’ என்று சொல்லப்படக் கூடிய ஒற்றைப்பாவனைக் கடவுச்சொல் விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். கடவுச்சொற்கள் தனிப்பட்ட பாவனைக்கே அன்றி, எவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக அல்ல – என்றுள்ளது.