இலங்கை
மன்னார் மாவட்டத்துக்கு புதிய மேலதிக செயலர்கள்!

மன்னார் மாவட்டத்துக்கு புதிய மேலதிக செயலர்கள்!
மன்னார் மாவட்டத்துக்கான நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக மாவட்டச் செயலர்கள் பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மன்னார் மாவட்டச்செயலர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை நேற்றுப் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர். மன்னார்ப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய மனோகரன் பிரதீப், மடுப்பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய கீ.பீட்நிஜாகரன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.