இலங்கை
யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோத்தாபயவுக்கு உத்தரவு!

யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோத்தாபயவுக்கு உத்தரவு!
2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி விசாரணையை கொழும்பில் நடத்துமாறு கோரியுள்ளார்.
எனினும், நீதியரசர்கள் கொண்ட அமர்வு அதனை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.