இலங்கை
யாழ் விபத்தில் முல்லைத்தீவு நபர் உயிரிழப்பு

யாழ் விபத்தில் முல்லைத்தீவு நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து, அச்சுவேலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு முதியவர் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.