இலங்கை
விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 155 இந்தியர்கள் – விரைந்து வெளியேற உத்தரவு!

விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 155 இந்தியர்கள் – விரைந்து வெளியேற உத்தரவு!
இலங்கையில் விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்காக 33,615,000 ரூபா தொகையையும், குடிவரவுத் துறைக்கு 500 அமெரிக்க டொலர் அபராதத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தியர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின் போது கைது செய்யப்பட்ட 25-54 வயதுக்குட்பட்ட குழு, வதிவிட விசாவில் இலங்கைக்கு வந்து, உள்ளூர் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்காக ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை தங்கியிருந்தனர்.
வெலிசரவில் உள்ள குடிவரவுத் துறையின் தடுப்பு மையத்தில் இடம் இல்லாததால், தேவையான அபராதங்களை செலுத்திய பிறகு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.