பொழுதுபோக்கு
விஜய் அரசியல் பேச்சு, எனக்கு அவ்ளோ சர்ப்ரைஸ் இல்ல; வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய் அரசியல் பேச்சு, எனக்கு அவ்ளோ சர்ப்ரைஸ் இல்ல; வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!
சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றுள்ள நடிகர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், தற்போது அவரின் பேச்சு எனக்கு எந்த வகையிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி, விஜய் நடிப்பில், துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். கடைசியாக ரஜினிகாந்த நடிப்பில் தர்பார் படத்தை இயக்கியிருந்தார் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பலவையான விமர்சனங்களை பெற்றது.அதன்பிறகு தமிழில் சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்த ஏ,ஆர்.முருகதாஸ், 5 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே விகடனின் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் அங்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தற்போது இயக்கி வரும் மதராஸி திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கஜினி மாதிரியான ஒரு திரைக்கதையும், துப்பாக்கி மாதிரியான ஒரு ஆக்ஷன் படமாகவும், எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட்ட நான் நினைத்தை எடுத்திருக்கிறேன்.மான் கராத்தே படத்தில் பார்த்தபோது டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர் ஒரு நம்பிக்கை. ஆனால் இப்போது, கடந்த 10 வருடங்களில் அதிக வளர்ச்சி கண்டுள்ளார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய அவர், விஜய் அரசியல் பேச்சுகள் குறித்து வீடியேவை நானும் பார்த்தேன். அவர் கத்தி படத்தில் பேசியது போல் நிஜத்தில் பேச வேண்டும் என்று சொன்னது எதார்த்தமாக சொன்னது தான்.விஜய் மிகவும் அமைதியானவர். அவர் பேசுவது அவருக்கே கேட்குதா இல்லையா என்ற சந்தேகம் வர அளவுக்கு மெதுவாக பேசுவார். அதனால் தான் நான் அவர் நேரில் பேச வேண்டும் என்று சொன்னேன். செட்டுக்குள் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் இருக்கக்கூடியவர். ஒரு ஸ்பிட் பர்சினாலிட்டி மாதிரி பேசிட்டு இருப்பார். இப்போது அவர் பேசுவது எனக்கு சர்ப்ரைஸ் இல்லை. நான் நேரிலேயே பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.