சினிமா
விஷால் நடிக்கும் 35-வது படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்..!அதிகாரபூர்வ அறிவிப்பு…!

விஷால் நடிக்கும் 35-வது படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்..!அதிகாரபூர்வ அறிவிப்பு…!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது.இந்நிலையில், விஷால் தற்போது தனது 35-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பூஜை விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தை ‘ஈட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கவுள்ளார். முக்கியமாக, இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.வி. சவுத்ரி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விஷாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். பூஜை நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை கௌரவித்தனர். இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்த நிலையில் படக்குழுவின் தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக உறுதியாகியுள்ளது. இது ஒரு சிறப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.