இலங்கை
வேலை தேடுபவர்களுக்க்கு அரிய வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்!

வேலை தேடுபவர்களுக்க்கு அரிய வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நற்செய்தியாக, பிரபல தமிழ்த் தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான மற்றும் றீச்சா நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சுமார் 200 பேர் வரை றீச்சா நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எந்தப் பகுதியில் உள்ளவர்களாக இருந்தாலும், தங்களது கல்வி மற்றும் தொழில் சார்ந்த தகுதிகளுடன் கூடிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைவாய்ப்பு முயற்சி, இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சமூகக் கடமையென்ற நெறிமுறையின் கீழ் செயல்படுவதாக பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
வேலை தேடும் இலங்கையர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
தங்களது வாழ்க்கையை மாற்றும் ஒரு புதிய திசைதொடக்கம் ஆக இது அமைவதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை