சினிமா
20 வருஷமா வாங்குற சம்பளத்த ஒரு புது நடிகை சீரியலுக்கு வாங்குறா!நடிகை தேவிப்ரியாவின் பதிவு!

20 வருஷமா வாங்குற சம்பளத்த ஒரு புது நடிகை சீரியலுக்கு வாங்குறா!நடிகை தேவிப்ரியாவின் பதிவு!
சின்னத்திரை துறையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வரும் மூத்த நடிகை தேவிப்ரியா, சமீபத்திய பேட்டியில் தற்போதைய சூழலை பற்றிய தன்னுடைய அதிரடியான கருத்துகளை பகிர்ந்துள்ளார். சீரியலில் ஒவ்வொரு காட்சிக்கும் நடிகர்கள் முழு மனதுடன் பயப்படவும் மரியாதையுடன் செயல்படவும் செய்தனர். “அந்த காலத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதே பெரும் விஷயம். அதை மரியாதையோடு தக்கவைத்து நடித்தோம்,” என்கிறார்.இப்போது சில புதிய நடிகர்கள், வாய்ப்புகளை எளிதாகக் கிடைக்கும் ஒன்றாகவே எண்ணுகிறார்கள். “இப்போ ஒரு போட்டோ போடுறாங்க, பிக்கப்பானா போயிடுறாங்க. அவ்வளவுதான்,” என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார். சில புதுசா வந்த நடிகைகள், குறைந்த அனுபவத்திலேயே அதிக சம்பளம் கேட்பதாகவும், அதே சம்பளம்தான் தனக்கும் வருவதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் “ப்ராம்ட்” என்ற கலாச்சாரம் அதிகமாகி விட்டதாகவும், அதனால் நடிகர்களின் அர்ப்பணிப்பு குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். “படிக்காம பேசி விடுறாங்க, நேரத்தை மதிக்காம ப்ராம்ட்-லேயே நடிக்கறாங்க.” இன்றைய சூழலில், மூத்த நடிகர்களுக்கு ஏற்புடைய மரியாதை இல்லை என்ற சோகம் அவர் பேச்சில் வெளிப்பட்டது.”நான் இல்லனா இந்த சீரியலே இல்ல”ன்னு சொல்ற அளவுக்கு இன்று சிலர் தைரியமா பேசுறாங்க. ஆனால், நம்முடைய பாதை, தன்னடக்கம், மரியாதை, கலைதிறன் இதெல்லாம் நமக்கு நிலைத்து நிற்க உதவிய காரணம்னு” இந்த மூத்த நடிகையின் உணர்வுபூர்வமான உரை முடிகிறது.