சினிமா
63 வயது நடிகருடன் காதல் உறவு? சர்ச்சையில் சிக்கிய ஹாலிவுட் நடிகை ஆனா டி ஆர்மஸ்

63 வயது நடிகருடன் காதல் உறவு? சர்ச்சையில் சிக்கிய ஹாலிவுட் நடிகை ஆனா டி ஆர்மஸ்
உலக புகழ் பெற்ற ஹாலிவுட் கதாநாயகிகளில் ஒருவர் ஆனா டி ஆர்மஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் ballerina from the world of johnwick திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருந்தார் ஆனா டி ஆர்மஸ்.இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் ஆனா டி ஆர்மஸ், தன்னை விட 30 வயது குறைவான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்தான்.ஆம், நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் நடிகை ஆனா டி ஆர்மஸ் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் இருவரும் ஒன்றாக கைகோர்த்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது தான். 63 வயதாகும் நடிகர் டாம் க்ருஸ்க்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது.அதே போல் நடிகை ஆனா டி ஆர்மஸ் கடந்த 2011ம் ஆண்டு Marc Clotet என்பவர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.