விளையாட்டு
IND vs ENG LIVE Score, 5th Test Day 1: தொடரை டிரா செய்யுமா இந்தியா? இங்கிலாந்துடன் கடைசி டெஸ்டில் மோதல்

IND vs ENG LIVE Score, 5th Test Day 1: தொடரை டிரா செய்யுமா இந்தியா? இங்கிலாந்துடன் கடைசி டெஸ்டில் மோதல்
இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதனைத் தொடர்ந்து லண்டனில் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பின்னர் மான்செஸ்டரில் நடந்த 4-வது போட்டி டிரா ஆனா நிலையில், தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது.