Connect with us

சினிமா

லைம் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகர்..! சோகத்தில் ரசிகர்கள்…

Published

on

Loading

லைம் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகர்..! சோகத்தில் ரசிகர்கள்…

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசையாளர் ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake) சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் லைம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின் அவரது ஆரோக்கிய நிலை குறித்து ரசிகர்களும், பொதுமக்களும் கவலை எழுப்பி வருகின்றனர். லைம் நோய் என்பது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். பொதுவாக அமெரிக்காவில் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. இந்த நோய் பொதுவாக டிக் (Tick) எனப்படும் சிறு ஜீவராசிகளின் கடித்தல் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.44 வயதான ஜஸ்டின் டிம்பர்லேக் உலக இசைப்பயணம் குறித்து பதிவிட்டிருந்த பதிவுடன் இதனையும் குறிப்பிட்டுள்ளார். மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த போது நரம்பு வலி, சோர்வு ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் என்பதை இப்போதே உணர்ந்தேன் எனவும் பதிவிட்டுள்ளார். இத்தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன