இலங்கை
அமெரிக்க வரிவிதிப்பு 20% ஆனது 15% இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்

அமெரிக்க வரிவிதிப்பு 20% ஆனது 15% இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காக அமெரிக்காவின் தீர்வை வரி 20 வீதமாக குறைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதுடன் அதனை மேலும் 15 வீதத்துக்கும் குறைவான இலக்காக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தீர்வை வரி வீதம் 20வீதம் வரை குறைத்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பொருட்களுக்கான தீர்வை வரியை ஐக்கிய அமெரிக்கா 20 வீதமாக குறைத்திருப்பதில் மகிழ்ச்சியடைக்கிறோம்.
இந்தியாவுக்கு 25 வீதம் செலுத்தியுள்ள நிலையில் எங்களை, வியட்நாம் மற்றும் பங்களாதேஷுடன் இணைத்திருக்கிறது.
எமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான ஊக்குவிப்பை வழங்குவதற்காக நாம் 15வீதத்துக்கும் குறைவான இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.
அதுதொடர்பில் பேச்சுவாரத்தை நடத்துவதற்கு எமக்கு வர்த்தக பொருளாதார வல்லுநர்கள் குழுவொன்று இருக்கவேண்டும்.