இலங்கை
இவ்வருட அரையாண்டில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 580 பால்நிலை வன்முறைகள்

இவ்வருட அரையாண்டில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 580 பால்நிலை வன்முறைகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ்வருட முதல் அரையாண்டில் 580 பால்நிலை வன்முறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பால்நிலை வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்க கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, இவ்வருடத்தின் ஜூன் மாத நிறைவு வரையான காலப்பகுதி வரை 580 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படும் போது கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பிரதேசசெயலக ரீதியாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா? என்பதனைச் சகல தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டுமென யாழ். மாவட்டச் செயலர் அறிவுறுத்தினார்.
அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பங்களிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுப் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களும் யாழ். மாவட்டச் செயலரால் வழங்கப்பட்டன.