சினிமா
எந்த ஊரு பிரியாணி பெஸ்ட்!! நீயா நானாவில் இலங்கை பிரியாணி ஸ்பெஷல்..

எந்த ஊரு பிரியாணி பெஸ்ட்!! நீயா நானாவில் இலங்கை பிரியாணி ஸ்பெஷல்..
தொகுப்பாளர் கோபிநாத் கடந்த 19 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி மிகப்பெரிய ஆதரவை மக்கள் மத்தியில் பெற்றும் நிகழ்ச்சி தான் விஜய் தொலைக்காட்சியின், நீயா நானா நிகழ்ச்சி.இரு தரப்பினர், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், சமூக ரீதியான பொறுத்தமான தலைப்புகளில் வேறுபட்ட கண்ணோட்டத்தோடு மக்கள் காணவும் ஒரு தளத்தை வழங்கி வருகிறது நீயா நானா நிகழ்ச்சி.இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில், இந்தியாவின் சிறந்த பிரியாணி எது – பிரியாணி பிரியர்கள் மற்றும் பிரியாணி மேக்கர்ஸ் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. அதில் பல ஊர்களில் இருந்து பல மாநிலங்களில் இருந்தும் சமைத்த பிரியாணியை வைத்து விவாதம் நடந்துள்ளது.அந்தவகையில் இலங்கையில் சமைக்கும் பிரியாணியை செஃப் ஒருவர் எடுத்து வந்து காண்பித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரியாணியை ருசித்து பார்த்த கோபிநாத், பிரம்பித்து போனபடி ரியாக்ஷன் கொடுத்துள்ள பிரமோ வீடியோ டிரெண்ட்டாகி வருகிறது.