உலகம்
சவுதி அரேபியாவில் இடிந்து விழுந்த இராட்டினம்; பலர் படுகாயம்!

சவுதி அரேபியாவில் இடிந்து விழுந்த இராட்டினம்; பலர் படுகாயம்!
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவொன்றில் நேற்றையதினம் இராட்டினமொன்று திடீரென உடைந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஹடா பகுதியில் உள்ள க்ரீன் மவுண்டன் பூங்காவில் நடந்த இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் படுகாயமடைந்தனர் எனவும் அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று 360 டிகிரிஸ்” என்று அழைக்கப்படும் அந்த இராட்டினத்தின் நடுவில் இருந்த கம்பம் திடீரென உடைந்து, இருக்கைகள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தன.
இந்த விபத்தின் போது இராட்டினத்தில் இருந்தவர்கள் அலறி துடித்ததாகவும், கீழே விழுந்தபோது அவர்களால் வெளியேற முடியவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இராட்டினத்தின் கம்பம் வேகமாகச் சுழன்று சில பார்வையாளர்களை தாக்கியதாகவும், இராட்டினத்தின் இருக்கைகள் தரையில் விழுந்ததால் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.