இலங்கை
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து!

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து!
கிளிநொச்சி பரந்தன் – முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கட்டாகலி மாடுகள் திடீரென வீதியை கடக்க முயற்சித்த போதிலும், அந்த வழியாக வந்த வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் சேவை வாகனம் மாட்டுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனம் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை