சினிமா
சிலீவ்லெஸ் ஆடையில் பக்கா கிளாமர் காட்டிய சாந்தினி.! இன்ஸ்டாவை சூடேற்றிய போட்டோஸ்.!

சிலீவ்லெஸ் ஆடையில் பக்கா கிளாமர் காட்டிய சாந்தினி.! இன்ஸ்டாவை சூடேற்றிய போட்டோஸ்.!
தமிழ் சினிமாவில் “சித்து +2” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. பிரபல இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய இப்படத்தில், நடிகர் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, சாந்தினி தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைவாகி, சீரியல் துறையை நோக்கி திரும்பினார். அங்கேயும் அவரது நடிப்பு திறமை மற்றும் அழகு, இரண்டும் சேர்ந்து பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கச் செய்தது.பின் சாந்தினி, ஜீ தமிழில் ஒளிபரப்பான “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த சீரியல் மூலம் பல குடும்பங்களுக்கு அவர் ஒரு “வீட்டு பிள்ளை” போல் ஆனார். கதாபாத்திரங்கள் வழியாக அவரின் உணர்வுபூர்வமான நடிப்பும், அழகும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன.ஒருபுறம் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாந்தினி, மற்றொரு புறம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான முகத்தை காட்டத் தொடங்கினார்.அந்தவகையில், அவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவ்வளவு சாதாரணமானவை அல்ல. குறிப்பாக, அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை மற்றும் அதில் கொடுத்த அசத்தலான போஸ், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த புகைப்படம் அவரை தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக்கியுள்ளது. சிலர், “இது நம்ம சீரியலில் பாவமாக நடிக்கிற சாந்தினியா?” என ஆச்சரியப்பட்டுள்ளனர்.