பொழுதுபோக்கு
தனுஷ்க்கு அம்மா நானா? என்னால முடியாது; அதே படத்தில் வில்லனுக்கு மனைவியான நடிகை: யார் தெரியுமா?

தனுஷ்க்கு அம்மா நானா? என்னால முடியாது; அதே படத்தில் வில்லனுக்கு மனைவியான நடிகை: யார் தெரியுமா?
தனுஷின் பொல்லாதவன் படத்தில் அவரது அம்மாவாக நடிக்க முதலில் வாய்ப்பு வந்ததை நடிகை அஞ்சு விகடனுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், தனுஷுக்கும் தனக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லை என்பதால் அம்மாவாக நடிக்க முடியாது என்றும் கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.பேபி அஞ்சு, குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, பல படங்களில் கதாநாயகி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1979-ஆம் ஆண்டு வெளியான “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார் பேபி அஞ்சு. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்துள்ளார்.உதிரிப்பூக்கள் தவிர, அச்சமில்லை அச்சமில்லை, அன்புள்ள ரஜினிகாந்த், ராஜாதி ராஜா போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பேபி அஞ்சு, அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர். 2007-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் பேபி அஞ்சு, வில்லனின் மனைவியாக நடித்து இருப்பார். இந்த கதாப்பாத்திரம் தனக்கு எப்படி கிடைத்தது என்றெல்லாம் அவர் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். பொல்லாதவன் படத்தில் தனுஷின் அம்மாவாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், தனுஷுக்கும் தனக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லை என்பதால் அம்மாவாக நடிக்க முடியாது என்றும் கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். இதன் பிறகுதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கிஷோரின் மனைவியாக நடிக்க அஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொல்லாதவன் படத்தில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளில், கிஷோரின் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தை அவர் விரும்பி ஏற்று நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் தனக்கு தனுஷின் அம்மா அல்லது கிஷோரின் மனைவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தான் அதைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். தனுஷுக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது அதனால்தான் நான் அந்த அம்மா கேரக்டரை எடுக்கவில்லை என்றும் கூறினார். பின் அந்த அம்மா கேரக்டர் பானுப்பிரியாவிற்கும் எனக்கு வில்லனின் மனைவி கதாப்பாத்திரம் கிடைத்ததாகவும் கூறினார்.‘பொல்லாதவன்’ல தனுஷுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்! – அஞ்சு #Anju | #Dhanush | #Vetrimaaran | #Polladhavan | #TeleVikatanதான் வெள்ளையாக இருப்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மேக்கப் போட்டும்கூட சரி வராததால் அப்படியே நடிக்கட்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாகவும் தெரிவித்தார். எனக்கான சூட்டிங் முடிந்த பிறகுகூட கேரவ்ன் செல்லாமல் சூட்டிங் நடக்கும் இடத்தில் அமர்ந்து அங்கு இருக்கும் பெண்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அங்கு இருப்பவர்கள் உற்சாகத்தினால் நடித்ததாகவும் தெரிவித்தார்.