சினிமா
தயாரிப்பாளர்களிடமும் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்ட அமீர்கான்…! வெளியான தகவல் இதோ….!

தயாரிப்பாளர்களிடமும் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்ட அமீர்கான்…! வெளியான தகவல் இதோ….!
திவி நிதி சர்மா எழுத்தில், பிரபல இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மனநலம் பாதித்த மாணவர்களுக்காக கூடைப்பந்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக ஆமிர்கான் நடித்துள்ளார். அவருடன் நடிகை ஜெனிலியா முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் . 2007-ஆம் ஆண்டு வெளியான, அமீர்கான் இயக்கிய மற்றும் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. அந்த படத்தை போலவே இந்நிகழ்வும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தற்போது, இப்படத்தை யூட்டியூபில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஓரளவு கட்டணத்தை செலுத்தி பார்வையிடக்கூடிய முறையில் இப்படம் வெளியிடப்படும். இதே வேளையில், திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள போதே யூட்டியூப் வெளியீடு பற்றி முன்பே அறிவித்திருக்கவேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்கள் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர்.