சினிமா
நயன்தாராவுக்கு ஏற்பட்ட மாறுபாடு…!படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய லேடி சூப்பர்ஸ்டார்!

நயன்தாராவுக்கு ஏற்பட்ட மாறுபாடு…!படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய லேடி சூப்பர்ஸ்டார்!
ஒருகாலத்தில் கோலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயினாக மாறிய நயன்தாரா, தனக்குத் தானே ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என பட்டம் சூட்டிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. பல படங்களில் அந்த பட்டத்துடன் தன் பெயரை சேர்க்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்தார். ஆனால், சமீபத்தில் அந்த பட்டத்தையும் தற்காலிகமாக புறக்கணித்துள்ளார்.தனது திருமண வீடியோவில் “நானும் ரவுடிதான்” பட காட்சிகளை அனுமதியின்றி சேர்த்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றார். அதன்பிறகு நடிப்பில் கடுமையான நிபந்தனைகளை வைக்கும் நிலையில் இருந்தார். சென்னையில்தான் படப்பிடிப்பு வேண்டும், குறைவான நேரம்தான் வேலை செய்வேன், என பலக்கட்டுப்பாடுகளை வைத்தார். அவருடன் வரும் பெரும் அணியின் சம்பளமும் தயாரிப்பாளரே ஏற்க வேண்டியது வழக்கமாகிவிட்டது.இந்த சூழலில், தற்போது நடிக்கத் தொடங்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிடம் கணிசமான மாற்றம் காணப்படுகிறது. ஷூட்டிங் நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்பே வந்து தயாராக இருப்பதோடு, தனது கேரவனுக்குள் கூட செல்லாமல், இயக்குநர் சுந்தர்.சி கூறும் படி எளிமையாக நடித்து கிளம்பிவிடுகிறார் என கூறப்படுகிறது. பழைய “ஆட்டிட்டியூட்” நயன்தாராவை விட்டு நீங்கிவிட்டதா? வாய்ப்புகளைத் தொடர விரும்பும் ஒரு புதிய நயன்தாராவை இந்த மாற்றம் காட்டுகிறதா? திரையுலகம் பதிலுக்காக காத்திருக்கிறது!