பொழுதுபோக்கு
நீயும் நானும் போதும், குழந்தை வேண்டாம்; அடம் பிடித்த தேவயானிக்கு ராஜகுமாரன் சொன்ன அட்வைஸ்: கடைசில நடந்ததே வேற!

நீயும் நானும் போதும், குழந்தை வேண்டாம்; அடம் பிடித்த தேவயானிக்கு ராஜகுமாரன் சொன்ன அட்வைஸ்: கடைசில நடந்ததே வேற!
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. மும்பையில் பிறந்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு பிரஷாந்த் – அஜித் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தேவயானி, காதல்கோட்டை, நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ், நீ வருவாய் என, வல்லரசு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தேவயானி நடித்திருக்கிறார். கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்த தேவயானி, அதன்பிறகு படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலில் பேட்டி அளித்த ராஜகுமாரன் தேவயானி பற்றி பேசியுளளார்.குழந்தைகள் குறித்து பேசிய ராஜகுமாரன், கிராமம் நகரம் என எதுவாக இருந்தாலும், வாழ்வதற்கு போராட வேண்டும். இந்த போராட்ட உலகில் என்னை எதற்காக கொண்டுவந்தீங்க என்று என் குழந்தை என்னை கேட்டுவிட கூடாது. அதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். என்னை மாதிரி ஒரு ஆண், உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தைகள் வேண்டாம். நீயும் நானும் போதும் என்று தேவயானியிடம் சொன்னேன். அவர் கேட்கவில்லை. குழந்தை வேண்டும் என்று சாமி கும்பிட தொடங்கினார்.திருச்சியில் இருக்கும் ரங்கநாதர் சாமியை தரிசனம் செய்து வைத்தார். ஒரு கட்டத்தில் கர்ப்பானார். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதலில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள். ஆனால் 48 நாட்கள் முன்னதாக சொர்க்க வாசல் திறக்கும்போது இரவு 12.05 மணிக்கு என் மகள் பிறந்தார். குழந்தை பிறந்த ஹாஸ்பிடலில், ஒரு குழந்தை அழுததது. எதோ குழந்தை அழும் சத்தம் கேட்கிறது என்று சொன்னேன். என்னுடன் வந்த பக்கத்துவீட்டுக்காரர், அது உங்க குழந்தை தான் சார் என்று சொன்னார் என ராஜகுமாரன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.