பொழுதுபோக்கு
நெருங்கும் ‘கூலி’ ரிலீஸ் தேதி; ஆனா ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருக்கமாட்டாரே; ஏன் தெரியுமா?

நெருங்கும் ‘கூலி’ ரிலீஸ் தேதி; ஆனா ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருக்கமாட்டாரே; ஏன் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் வெளியாகும்போது நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருக்கமாட்டார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் 70 வயதை கடந்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் இயக்கும் 6-வது படம் இதுவாகும்.இந்த படத்தில் நாகர்ஷூனா, சவுபின் சபீர், உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோனிகா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.அதேபோல் அவ்வப்போது வெளியாகும் கூலி படத்தின் அப்டேட்கள், தொடர்ந்து படத்தின் மீதூன எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்து ஓரிரு நாட்களில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் ரசிகராக இருப்பதால், அவரை ஆடியோ லான்ச்சில் பார்த்துக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.படம் வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து கூலி படத்தின் முக்கிய அப்டேட்கள், டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்ப்பக்கடும் நிலையில், கூலி படம் வெளியாகும்போது ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருக்கமாட்டா என்ற தகவலும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூலி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இதனிடையே ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா செல்ல இருப்பதால், கூலி படம் வெளியாகும்போது ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்தின் ஃபீவர் பெரிய அளவில் உள்ள நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரித்துள்ளது,