Connect with us

இலங்கை

பி.வை.டி வாகன இறக்குமதியில் பாரிய சிக்கல்!

Published

on

Loading

பி.வை.டி வாகன இறக்குமதியில் பாரிய சிக்கல்!

சர்ச்சைக்குரிய மோட்டாரின் சக்தி தொடர்பாக சுமார் 1,000 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, BYD வாகனத்தின் மோட்டார் திறனை சோதிக்க இலங்கை சுங்கத்துறை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நேற்றைய நாடாளுமன்ற பொது நிதி குழு அமர்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் தனியார் நிறுவனமானது, சில சர்வதேச ஆய்வகங்களை பரிந்துரைத்ததாக கூறியுள்ளது.

Advertisement

ஆனால் தொழில்நுட்ப விடயங்களில் இலங்கை சுங்கத்துறையில் வழக்கமான நடைமுறை மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைப்பது என பொது நிதி குழு அமர்வில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனத்தின் வாகன மோட்டாரைச் சரிபார்க்க வைப்பது தனது ஆலோசனை என்று பொது நிதி குழு தலைவர் ஹர்ஷா டி சில்வா கூறியுள்ளார்.

இது ஒரு சர்வதேச பிரச்சனை என்றும், இது சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

குறைந்த செயல்திறன் கொண்ட கார்களுக்கு வழங்கப்படும் குறைந்த வரி வரம்புகளுக்கு இணங்க 100kW க்கு உற்பத்தி செய்யும் மோட்டார் இந்த வாகனத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேபாளம் மற்றும் சிங்கப்பூரில் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குழு உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஊடகங்களில் படித்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையைப் பெற்று வருவதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார்.

இது மிக உயர்ந்த தொழில்நுட்ப திறன் கொண்ட அமைப்பை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தொழில் திறன் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் வரை. இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விடயம் என ஹர்ஷா டி சில்வா இதன்போது விளக்கியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன