இலங்கை
பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
ஓகஸ்ட் மாதத்தில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தால், பேருந்துக் கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.