சினிமா
ஷூட்டிங்கில் 14 முறை அறைந்த நாகர்ஜுனா!! நடிகை இஷா கோபிகர் ஓபன் டாக்..

ஷூட்டிங்கில் 14 முறை அறைந்த நாகர்ஜுனா!! நடிகை இஷா கோபிகர் ஓபன் டாக்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாகர்ஜுனா, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்துள்ள நாகர்ஜுனா, நடிகை இஷா கோபிகருடன் சந்திரலேகா படத்தில் நடித்திருந்தார்.தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் போன்ற படங்களில் நடித்தார் இஷா கோபிகர்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சந்திரலேகா படத்தில் நாகர்ஜுனாவுடன் நடித்தபோது நடந்த சம்பவம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். படத்தில் கோபத்தை வெளிக்காட்டும் காட்சி ஒன்று எதிர்ப்பார்த்தபடி வரவில்லை.அதனால் உண்மையாக தோன்ற வேண்டும் என்பதற்காக நாகர்ஜுனாவை தன்னை அறையுமாறு கேட்டுகொண்டேன். அதற்கு ஆரம்பத்தில் நாகர்ஜுனா தயங்கினார்.ஆனால் இறுதியில் 14 முறை அறைந்ததாகவும், கன்னத்தில் அறைந்த அடையாளங்கள் இருந்ததாகவும் டேக்கிற்கு பின் நாகர்ஜுனா மன்னிப்பு கேட்டதாகவும் இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.