Connect with us

விளையாட்டு

36 கி.மீ கடல் வழியை கடந்து சாதனை… தேனி மாணவருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

Published

on

Adhvaith Harisankar English Channel swim TN college student from Theni  Tamil News

Loading

36 கி.மீ கடல் வழியை கடந்து சாதனை… தேனி மாணவருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

இங்கிலாந்துக்கும் –  பிரான்சுக்கும் இடையே உள்ள இங்கிலிஷ் சேனல் என்கிற கடினமான 36 கி.மீ கொண்ட கடல் வழி பகுதியை 12 மணி நேரம் பத்து நிமிடங்கள் நீச்சலடித்து கடந்து சாதனை படைத்துள்ளார் தேனியை சேர்ந்த அதவைத். இங்கிலாந்துக்கும் –  பிரான்சுக்கும் இடையே உள்ள இங்கிலிஷ் சேனல் (English Channel) என்கிற கடினமான கடல் வழி பகுதியை 36 கி.மீ தூரத்தை 12 மணி நேரம் பத்து நிமிடங்கள் நீச்சலடித்து கடந்து சாதனை படைத்த தேனியை சேர்ந்த அதவைத் ஹரிசங்கர் (18) என்கிற மாணவன் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அந்த மாணவரை அவருடைய பெற்றோர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் உற்சாகமாக வரவேற்றனர். ஆறு பேர் கலந்து கொண்ட அந்த சாதனையில் அதவைத் உட்பட தமிழ்நாட்டில் இருந்து இருவரும், அசாமை சேர்ந்த ஒருவர், மெக்சிகோவை சேர்ந்த ஒருவர் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் கொடுத்த ஊக்கத்தால்தான் தன்னால் இதில் கலந்து கொள்ள முடிந்தது என அதவைத் தெரிவித்தார்.செய்தி: க.சண்முகவடிவேல். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன