பொழுதுபோக்கு
71-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்கிங்’ தேர்வு

71-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்கிங்’ தேர்வு
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 71வது சீசனுக்காக வெற்றியாளர்கள் பட்டியல் இன்று (ஆகஸ்ட் 1, 2025) புது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவித்துள்ளது. 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இந்த விருதுகளுக்குத் தகுதி பெற்றன.2023-ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றி ஆண்டாகவே அமைந்தது. அந்த ஆண்டில், பதான், அனிமல், டுவல்த் ஃபெயில், ஓஎம்.ஜி 2 உள்ளிட்ட இந்தி படங்களும், சீதாராமம், மந்த் ஆஃப் மது, பாலஹம், தசரா போன்ற தெலுங்கு படங்களும், ஜெயிலர், லியோ ஆகிய தமிழ் படங்களும், நன்பகல் நேரத்து மயக்கம், 2018 எவரிஒன் ஈஸ் ஹீரோ, இரட்டா, காதல் தி கோர் ஆகிய மலையாள படங்களும் பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக உள்ளது.70-வது திரைப்பட விழாவில் தென்னிந்தியாவில், சிறந்த நடிகருக்கான விருதை, காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியும், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யாமேனனுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில், நான் ஃபீச்சர் பிலிம் (Non Future Films) பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. அதேபோல் சிறந்த தமிழ் படம் பிரிவில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ்கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் தேர்வாகியுள்ளது, சிறந்த தெலுங்கு படமாக பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி திரைப்படம் தேர்வாகியுள்ளது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் இந்த படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.வாத்தி படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த திரைக்கதை பிரிவில், பார்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது, பார்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கரக்கு சிறந்த சப்போட்டிங் ஆக்டர் பிரிவில் விருது கிடைத்துள்ளது.