இலங்கை
இரகசிய தகவலால் கைதான இளைஞன் ; சோதனையில் மீட்க்கப்பட்ட பொருட்கள்

இரகசிய தகவலால் கைதான இளைஞன் ; சோதனையில் மீட்க்கப்பட்ட பொருட்கள்
கம்பஹாவில் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேல்மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (01) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 15 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.