இலங்கை
இலங்கையில் போதைப்பொருள் விற்பனையில் சீனர்; பொறி வைத்து பிடித்த பொலிஸார்

இலங்கையில் போதைப்பொருள் விற்பனையில் சீனர்; பொறி வைத்து பிடித்த பொலிஸார்
இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் கசினோ விடுதிகளில் சீன பிரஜைகளுக்கு ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பிரதான போதைப்பொருள் வர்த்தகரை கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட நபர் சீன நாட்டவர் என்றும், அவர் நீண்ட காலமாக நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சீன நாட்டினருக்கு ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மோசடி தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 50 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
மாலைத்தீவு மற்றும் இலங்கையரிடமிருந்து போதைப்பொருட்களை பெற்று, இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் கசினோ விடுதிகளுக்கு செல்லும் சீன நாட்டினருக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சீன பிரஜை, தற்போது வரை சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளார்.