இலங்கை
இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
அம்பாந்தோட்டை – அம்பலாந்தோட்டை, ஹுங்கம, பிங்கம பிரதேசத்தில் இன்று (02) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் துப்பாக்கியுடன் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹுங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.