Connect with us

இலங்கை

கிண்ணியாவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்!

Published

on

Loading

கிண்ணியாவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்!

கிண்ணியா பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கிண்ணியா நகரசபை தவிசாளர் தலைமையில், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று(2) இடம்பெற்றது.

இதன்போது, ஒற்றை பக்கம் வாகன நிறுத்தத்தை அமுலாக்கல், பாடசாலை ஆரம்பிக்கும் போதும் விடுகை நேரமும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்துக்கு தடைவிதித்தல் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Advertisement

மேலும் தலைக்கவசம் அணிதல், மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணித்தல், அதிக வேகமாக வாகனத்தை செலுத்துதல் போன்ற விடயங்களில் இருக்கும் சட்டவிடயங்களை கடினமாக நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும் நேரம், முடிவுறும் நேரங்களில் வீதிகளில் நின்று போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்துவோரை கைது செய்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, இரவு 11.00 மணிக்கு பின்னர் பொருத்தமான காரணங்கள் இன்றி வீதிகளில் நடமாடுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும் வீதிகளில் குப்பை போன்ற கழிவுகளை விடுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

மேற்படி தீர்மானங்கள் அனைத்தும் எதிர்வரும் 04 ஆம் திகதியிலிருந்து  நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நகரசபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன