இலங்கை
கிளப் வசந்த கொலை வழக்கு ; குற்றக் குழு தலைவர் விளக்கமறியல்

கிளப் வசந்த கொலை வழக்கு ; குற்றக் குழு தலைவர் விளக்கமறியல்
‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தலைவரான சுஜீவ ருவன் குமார டி சில்வா, ‘கிளப் வசந்த’ கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் முன்பே தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், இன்று (1) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதையடுத்து, அவரை 2025 ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுஜீவ ருவன், இலங்கையில் பல பிரபல குற்றச்சம்பவங்களில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டவராக இருப்பதுடன், கடந்த சில வருடங்களாக பொலிஸாரின் வலைவீச்சில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.