சினிமா
“கூலி” பட ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட சூப்பரான அப்டேட்.!

“கூலி” பட ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட சூப்பரான அப்டேட்.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சினிமா ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.படத்துக்கான ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் அறிவித்துள்ளது.‘கூலி’ என்பது ரஜினியின் முந்தைய ஹிட் படங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒரு பக்கா மாஸ் மற்றும் கமெர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவர் முன்னதாக கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை வழங்கி ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றவர்.அந்தவகையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில், ரஜினியின் மேடை பேச்சினைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.